சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாணவர்களிடம் காலை பிடித்து விட கூறிய ஆசிரியரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கிழக்கு ராஜபாளையத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஜெயபிரகாஷ் எந்நேரமும் தூங்கிக்கொண்டிருப்பதாகவும், மாணவர்களிடம் தனது காலை பிடித்துவிடுமாறு அவ்வப்போது கூறுவதாக தெரிகிறது. அதன்பேரில், மாணவர்களும் பள்ளி வகுப்பறையில் அவரின் காலை பிடித்துவிடுவது வழக்கம்.இந்த நிலையில், அவரது வண்டவாளத்தை ஒருவர் படம்பிடித்து, அதனை சமூகவலைதளங்களில் பரப்பினர். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவின்பேரில், கல்வி அலுவலர்கள் பள்ளிக்கு சென்று இன்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவர்களிடம் காலை பிடித்துவிடுமாறு கூறியது, உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.