Salem CEO Latest News | முதன்மை கல்வி அலுவலருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Salem CEO Latest News
ஞாயிறன்றும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க சொல்லி கட்டாயப்படுத்துவதாக கூறி, தமிழ்நாடு பட்டதாரி மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறியதாவது, பொதுத்தேர்வின் போது 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேர சிறப்பு வகுப்புகளும் மற்றும் சனிக்கிழமையன்றும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், எந்த விதமான எழுத்துப்பூர்வமான ஆணைகள் இல்லாமல் ஞாயிறன்றும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், அப்போதுதான், மாநில அளவில் சேலம் மாவட்டம் சிறந்த தேர்ச்சி விகிதம் பெறும் என்று கூறி தலைமை ஆசிரியர்கள் மூலம் அவர் மறைமுக கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
இது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும் என்றும், அதே சமயத்தில் ஆசிரியர்களுக்கான விடுமுறை ஓய்வும் கேள்விக்குறியாக உள்ளது.
Read Also: உடற்கல்வி ஆய்வாளர் மாற்றுப்பணி கைவிடுக
கல்வி என்பது உடல் உழைப்பு அல்ல. ஏழு நாட்களும் தொடர்ந்து வேலை செய்தால் என்னவாகும் என்பதை முதன்மை கல்வி அலுவலர் உணாராமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையை கைவிட வலியுறுத்தி சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு சேலம் நாட்டாண்மைக் கழகத்தின் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.