1. பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவர்களைப் பள்ளியில் சேர்த்து, அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்துதல்
2. ஆறு வயதிற்கு மேற்பட்டு பள்ளியில் சேர்க்காத/இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களின் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்க்கவும், சிறப்புப் பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்தல்
3. பள்ளி அமைந்திருக்கும் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.4. இந்தச் சட்டத்தின்கீழ் பள்ளி மேலாண்மைக் குழு ஏதேனும் நிதியினைப் பெற்றிருந்தால், அதற்காகத் தனியான வங்கிக் கணக்கைத் தொடங்கி நிருவகித்தல் வேண்டும். இந்தநிதிக் கணக்கினை ஆண்டுத் தணிக்கைக்கு உட்படுத்தி, இதர விவரங்களோடு பொதுமக்கள் பார்வைக்கு வைத்தல்.
5. இந்தச் சட்டத்தின்படி மாணவர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்தல்.6. வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிந்த பிரிவைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள், சுகூநு – 2009 சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் தொடக்க வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்ந்து இலவசக் கல்வி பெறுவதை உறுதி செய்தல்.
7. மாற்றுத்திறன் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்கள் கல்வி கற்கத் தேவையான வசதிகள், பள்ளியில் சேர்த்தல், வகுப்பறையில் பங்கேற்கச் செய்தல், தொடக்கக் கல்வியை நிறைவு செய்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்தல்.8. ஆண்டுதோறும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரித்தல்.
Role of The School Management Committee in Tamil Nadu 9. அரசு, உள்ளாட்சி அமைப்பு மற்றும் வேறு மூலங்களில் இருந்து கிடைக்கும் நிதி ஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுத்தப்படுவதற்கு உறுதுணையாக இருத்தல். 10. பள்ளியின் செயல்பாடுகளைக் கண்காணித்து, அவற்றுடன் இணைந்து பணியாற்றுதல்.
11. மாணவர்களிடையே வளர்க்கப்படும் கற்றல் திறன்களைக் கவனித்து அதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துதலில் பங்கு கொள்ளுதல்.12. பள்ளியில் மதிய உணவுத் திட்டம் முறையாகச் செயல்படுவதைக் கண்காணித்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல்.
13. கிராம சபைக் கூட்டம் நடைபெறும்பொழுதெல்லாம் அக்கூட்டத்தில் கலந்துகொண்டு பள்ளி மேம்பாட்டுத்திட்டம் மற்றும் கல்விசார்ந்த தீர்மானங்கள் நிறைவேற உதவுதல். ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வரவு செலவுக் கணக்கு விவரங்களை நிதியாண்டு முடிந்த நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கையாகத் தயாரித்து, அதில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் தலைமையாசிரியர் கையெழுத்திட்டு உள்ளூர் அதிகார மையத்திடம் ஒப்படைத்தல்.15. இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுவதைத் தடுத்தல், சேர்க்கை மறுத்தல், உடலளவில் மனதளவில் துன்புறுத்தல், பாகுபாடு போன்ற கல்வி உரிமை மீறல்கள் குறித்த சம்பவம் நடந்தால், இவற்றைப் பற்றி உள்ளூர் அதிகார மையத்தின் கவனத்திற்குக்கொண்டு செல்லுதல்.
16. சூழ்நிலைகேற்ப பள்ளிகளில் நடத்தப்படும் சுகாதார விழிப்புணர்வு செயல்பாடுகளில் பங்கு பெறுதல்.17. மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படுவதைக் கண்காணித்தல்.