பாரதிய ஜனதா கட்சி, மாநில துணைத் தலைவர், நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய அரசு நிதி அளிக்காததால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை என்கிறது தமிழ்நாடு அரசு.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் ((ICT) அமைப்பதற்கும், கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கும் மத்திய அரசு அளித்த நிதியின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்காமல், கணினி நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை நியமிக்காமல், ஆய்வகங்களை அமைக்காமல் வேறு எதற்கோ செலவு செய்துள்ளது தமிழக அரசு.அரசு பள்ளிகளில் பயிலாத மற்ற மாணவர்கள் அனைவரும் கணினி அறிவியல் பாடம் படிக்கும் நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் புறக்கணிக்கப்படுவது, வஞ்சிக்கப்படுவது அநியாயம், அநீதி.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் சூழலில், கணினி அறிவியல் கூட ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்காமல் இருப்பது தான் சமூக நீதியா? மத்திய அரசு எந்த நோக்கத்திற்காக நிதி அளித்ததோ, அதை செயல்படுத்தாமல், தன் விருப்பத்தின் பேரில், மாநில அரசு நடந்து கொண்டால், கேள்வி கேட்கத்தான் செய்யும் மத்திய அரசு.ஊழலிலேயே ஊறித் திளைத்த காங்கிரஸ் அரசு திராவிட மாடல் ஊழலை கண்டும் காணாமல் இருந்திருக்கலாம். ஆனால் நடைபெற்றுக் கொண்டிருப்பது நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக ஆட்சி. ஊழல், முறைகேடுகளில் ஊறித் திளைக்கும் ‘திராவிட மாடலை’ தவிடு பொடியாக்கும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.