தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் நவம்பர் 16ம் தேதி பள்ளி திறப்பு முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர் சங்க கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராததால், எதிர்வரும் மழை மற்றும் பனிக்காலங்களில் கொரோனாவின் வீரியம் கடுமையாக இருக்கும். எனவே, நவம்பர் 16ம் தேதி பள்ளி திறப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் மற்றும் பள்ளிகள் திறப்பு பொங்கல் வரை தள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.