ரமாநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஹபிப் முகமது. இவர் ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக கடந்த நான்கு ஆண்டு மேலாக பணியாற்றி வந்தார்.
இவர் பள்ளி மாணவியிடம் ஆபாசமாக செல்போனில் பேசியுள்ளார். இதுதொடர்பான செய்தி, நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தன. இதையடுத்து முதுகுளத்தூர் போலீசார் அவரிடம் விசாரித்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்துள்ளனார். இதைதொடர்ந்து, அவர் பரமக்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். துறை ரீதியாக மாவட்ட பள்ளி கல்வித்துறை அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, கூறும்போது, கைதுக்கு பின் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது வரைக்கும், துறை ரீதியான விசாரணை நடத்தப்படவில்லை.