ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் புயலாக மாறியது. புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரைைய கடக்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.