Rain Holiday Today Latest News in Tamil Nadu | பள்ளிகள் இன்று விடுமுறை
Rain Holiday Today Latest News in Tamil Nadu
மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் சற்று முன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில், இன்று அதிகாலை முதல் வேலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. மாணவர்கள் பாதுகாப்பு நலன்கருதி, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல்பாண்டியன் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். பிற வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என தெரிவித்துள்ளார்.