Rain holiday today district | மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Rain holiday today district
கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (23.11.2023) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நீலகிரி, விருதுநகர் மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மட்டும் காரமடை ஒன்றியத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.