Rain holiday Chennai | சென்னையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Rain holiday Chennai
கனமழை காரணமாக சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று காலை முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஈக்காட்டுதாங்கல், மேற்குமாம்பலம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 4.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மாணவர்களின் நலன் கருதி, சென்னை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு பொருந்தாது. இதற்கான அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் சற்று முன் வெளியிட்டார்
மேலும், மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.