Pudukottai Education News | புதுக்கோட்டை கல்வித்துறையில் பூகம்பம்
Pudukottai Education News
நற்சிந்தனை, ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றிற்கு எடுத்துக்கட்டாக விளங்க வேண்டிய பள்ளி கல்வித்துறை, சமீப வருடங்களாக, அதற்கு நேர்மாறாக ஊழல், பழிவாங்குதல், அதிகார ஆதிக்கம் உள்ளிட்டவை தலைவிரித்தாடுகிறது.
இதற்கு பல உதாரணம் வரிசையாக அடுக்கிட முடியும். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கல்வி மாவட்டம், அன்னவாசல் வட்டாரத்தில் உள்ளது குளம் மற்றும் வாய் என்று பெயருடைய அரசு தொடக்க பள்ளி உள்ளது.
கடந்த கல்வியாண்டு துவக்கத்தில், அன்று இடைநிலை ஆசிரியர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். அவரது மறைவிற்கு பின், அவரது துணைவியார் கூலி வேலைக்கு சென்று தனது இரு பிள்ளைகளை கவனித்து வருகிறார். பி்ன்னர், ஆசிரியரின் துணைவியார், தனது கணவரின் பணபலன்கள் (சிபிஎஸ்) எதிர்நோக்கி அந்த வட்டார கல்வி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.
Read Also: Arumugasamy Commission Report PDF
ஒரு வருடம் ஆகிய நிலையிலும் இந்த கல்வியாண்டு தொடங்கிய நிலையிலும் கூட, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ள கல்வி அலுவலர்கள் தற்போது அவருக்கான பண பலன்கள் அந்த குடும்பத்திற்கு வாங்கி தருவதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
காரணம் என்னவென்றால், கீழ் மட்டத்தில் உள்ள அலுவலர், தான் சொன்னபடி கேட்க வேண்டும் என சூசகமாக கூறியுளார். மேலும் இந்த பணிகளை முடிக்க சம்திங், சம்திங் கேட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண், அங்கிருந்து நடையை கட்டினார். பின்னர், வேண்டுமென்றே அரைகுறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பம் மாவட்ட கல்வி அலுவலகம் மூலமாக முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. விண்ணப்பத்தில் குறை உள்ளது என மீண்டும் அதே வட்டார கல்வி அலுவலகத்திற்கு அனுப்பட்டது. பின்னர், கடந்த 16ம் தேதிதான், நகல் ஒன்று அந்த ஆசிரியரின் துணைவியாருக்கு அனுப்பப்பட்டது. அதில் பல தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது.
அதாவது, கணவர் இறந்து ஓராண்டு ஆன நிலையிலும் கூட அங்குள்ள கல்வி அலுவலர்கள் மனசாட்சியின்றி அவரது விண்ணப்பத்தை வைத்துக்கொண்டு அலுவலகத்தில் டீ ஆற்றுவதுபோல் ஆற்றிக்கொண்டு இருப்பதாக அங்குள்ள ஆசிரியர்கள் புலம்புகின்றனர். நமக்கென்ன என்றும் ஆசிரியர் சங்கம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள, புதிய கமிஷனர், செயலர் இந்த விஷயத்தை உடனடியாக கவனித்து, ஆசிரியரின் துணைவியாருக்கு பணபலன்களை வழங்கியும், சம்மந்தபட்ட அனைத்து கல்வி அலுவலர்கள் மீது விசாரணை செய்து, காலதாமதத்திற்கு என்ன காரணம், அல்லது அவர்கள் அலுவலகத்தில் இப்படிதான் டக், டக், டக்கென்று வேலைகளை செய்து வருகிறார்களா என ஆராய்ந்து தண்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.