Private Candidates public exam applying date | தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்
Private Candidates public exam applying date
அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெறும் மார்ச் மற்றும் ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஏற்கனவே, நேரடி தனித்தேர்வர்களாக மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1)பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற/தேர்ச்சி பெறாத/ வருகை புரியாத அனைவரும், தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கும், 11ஆம் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்
எனவே, தனித்தேர்வர்கள் வரும் 26.12.2022 (திட்கட்கிழமை) முதல் 3.01.2023 (செவ்வாய்க்கிழமை) வரையிலான நாட்களில் (சனி, ஞாயிறு நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.
தட்கல் அனுமதி
மேற்கண்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 5.1.2023 முதல் 7.1.2023 வரையிலான நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 (பிளஸ் 1, பிளஸ் 2), ரூ. 500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தத்கல் முறையில் விண்ணப்பித்துகொள்ளலாம்.
தேர்வு கட்டணம்

தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள்
மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை இந்த இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்துகொள்ளலாம். மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்கள், சம்மந்தப்பட்ட அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் அறிந்துகொள்ளலாம்.
தொழற்பயிற்சி பயின்ற மாணவர்கள்
எட்டாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தேர்வுகளுக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்கல்வி பயின்ற மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2க்கான தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தேர்வுகளுக்கும் சேவை மையம் வாயிலாக மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கால அட்டவணை
பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு கால அட்டவணை இணையதளத்தில் காணலாம்.