கோடை விடுமுறையில் பள்ளி கல்வித்துறை, எண்ணும் எழுத்து பயிற்சி ஆசிரியர் கூட்டணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், மேலும் பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்ட அறிக்கை,
கடந்த 21.05.2022 முதல் ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் பாணியாற்றும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. வரும் ஜூன் 12ம் தேதி கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது வழக்கமான கோடைவிடுமுறை குறைவான நாளாகும். 2021-22ம் கல்வியாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்கள் தாமதமாக பள்ளிக்கு வருகை புாிந்ததாலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்கள் 220 நாட்களை தாண்டியுள்ளது. இது வழக்கமான ஆண்டின் வேலை நாட்கள் விடக் கூடுதலாகும்.
இந்த சூழலில் 2021-22ம் கல்வியாண்டில் அளிக்கப்பட்ட குறைவான கோடை விடுமுறை நாட்களிலும் 1.6.2022 மற்றம் 2.6.2022 ஆகிய இரு நாட்கள் எண்ணும் எழுத்து பயிற்சிக்கான கருத்தாளர் பயிற்சியும், 1 முதல் 3ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 6.6.2022 முதல் 10.6.20222 முடிய எண்ணும் எழுத்தும் பயிற்சியும் தமிழ்நாடு முழுவதும் வழங்கிட பள்ளிகல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Ennum Ezhuthum Training|எண்ணும் எழுத்தும் பயிற்சி எப்போது?
இவ்வாறு கோடை விடுமுறையில் அளிக்கப்படும் பயிற்சி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க கல்வி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறையில் இதுபோன்ற பயிற்சிகள் இதற்கு முன்பு வழங்கப்பட்டதில்லை. மேலும் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் கோடை விடுமுறை துய்க்கும் பிரிவினாரவர். இதனாலயே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. 15 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
எனவே, இந்த கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட குறைவான கோடை விடுமுறை நாட்களையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையாக எண்ணும் எழுத்தும் பயிற்சி அமைந்துள்ளது. கோடை விடுமுறையில் நடத்தப்படும் பயிற்சியை கல்வித்துறை கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |