இசைப்பள்ளி மாணவர்கள் கோயில் திருவிழாக்களில் முன்னுரிமை
திருக்கோயில் நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களில் இசைப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ ALSO | கலைச் செம்மல் விருது என்றால் என்ன?
இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி முக்கிய திருவிழாக்கள் மற்றும் சிவாலயங்களில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலை பண்பாட்டுத் துறையில் பதிவு செய்த கலைஞர்கள் இசை கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயின்ற கலைஞர்களை பயன்படுத்த அனைத்து அலுவலர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கலைஞர்கள் மற்றும் கலைக்குழுவினரின் விவரம் பெறுவதற்கு ஏதுவாக கலை பண்பாட்டு துறை மண்டல உதவி உதவி இயக்குனர்கள், இசைப் பள்ளி முதல்வர்கள், மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கலைஞர்களின் விவரம் பெற்று அவர்களை திருக்கோயில்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழர் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கவும் அக்கறைகளை இன்றைய இளைய தலைமுறை இளைய சமுதாயத்தினர் கொண்டு சேர்க்கவும் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து துறை கோயில்களிலும் நடைபெறும் திருக்கோயில் நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய திருவிழாக்களில் கலை பண்பாடு மற்றும் இசைப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது