கோவை பொள்ளாச்சி ஜமீன்முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். அப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவர் ஒருவர், சக மாணவர்களுடன் விளையாடும் போது அவர்களுக்கள் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, வகுப்பு ஆசிரியர் பள்ளி தலைமை ஆசிரியர் திலகவதியிடம் கூறியுள்ளார்.
Read Also: தேர்வு பணியில் மன உளைச்சலான ஆன கோவை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர், மாணவரை முட்டி போட வைத்ததாகவும், அதே பள்ளியில் படிக்கும் அக்காவை அழைத்து, பிரம்பை கொடுத்து மாணவனை அடிக்க சொன்னதாகவும் தெரிகிறது. அதில் மாணவனுக்கு, கை மற்றும் உடல் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து பெற்றோர், இருவரிடம் விசாரித்தபோது, பள்ளியில் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து, மாணவர்களின் பெற்றோர் தம்பியை அடிக்க அக்காவிடம் பிரம்பை கொடுத்த தலைமை ஆசிரியரை கண்டித்து, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் எப்படி குழந்தைகள் கையில் பிரம்பை கொடுக்கலாம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.