இந்தியாவில் குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் காணாமல் போகுதல் அடிக்கடி அரங்கேறி வருகிறது. அங்கும், இங்குமாய் நடப்பதால், அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதேபோன்ற சம்பவங்களுக்கு பெற்றோரின் அஜாக்கிரதையும் சிறிய பங்காக உள்ளது. குறிப்பாக, வட மாநிலங்களில் இதுபோன்று சம்பவங்கள் சற்று அதிகமாகவே என்று கூறலாம்.
ஓடிசா மாநில போலீசார் காணாமல் போன குழந்தைகளை மீட்டெடுக்க, சிறப்பு ஆபரேஷன் யுத்தியை செயல்படுத்த தொடங்கினர். இதில் எட்டு நாட்களில் 894 காணாமல் போன குழந்தையை மீட்டெடுத்து தங்களது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை பலர் பாராட்டியுள்ளனர். ஒடிசா குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு ஆபரேஷன் திட்டத்தில், முதல்கட்டமாக காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க திட்டமிட்டனர். இந்த திட்டம் ஜனவரி 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரே சமயத்தில் நடந்தது. இதில் 894 குழந்தைகளை மாநிலம் முழுவதும் ஒரே வாரத்தில் மீட்டெடுத்தனர். இதில் அதிர்ச்சிகுள்ளான விஷயம் என்னவென்றால், 800 பேர் பெண் குழந்தைகளை ஆவார்கள். குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக, பல்வேறு காவல்நிலையங்களில் புகார்கள் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்டு இருந்தன. கென்ட்ரபாரா மாவட்டத்தில் மட்டும் சுமார் 127 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர், அதேசமயம், மயூர்பான்ச் மற்றும் பாலசோர் மாவட்டங்களில் 199 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு ஆபரேஷன் தொடர்ந்து நடக்கும் என்று ஓடிசா மாநில டிஜிபி அபிஹோ தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பெற்றோர் தங்களது நேரத்தை குழந்தைகளிடம் செலவழிக்க வேண்டும், பாசத்துடன் அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும், அதட்டாமல் அவர்களிடம் அறிவுரை கூற வேண்டும், மிக முக்கிய அவர்களை கவனித்து கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.