Pocso Act in Tamil | பெண் குழந்தைகளை அரவணைக்கும் போக்ஸோ சட்டம் 2012
Pocso Act in Tamil
18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது. இந்த சட்டம் 2012ல் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது, அந்தரங்க உறுப்புகளை தொடுவது அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது, பாலியல் சீண்டல்கள் செய்வது, பாலியல் ரீதியாக செய்கை செய்வது, தொலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது.
ஆபாச படங்கள் எடுப்பது, விற்பது, தயாரிப்பது மற்றவருக்கு கொடுப்பது, இணையதளம், கணினி என எந்த தொழில் நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே.
போக்ஸோ குற்றத்திற்கு 7 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்க வழிவகை செய்கிறது.
~இது ஒரு விழிப்புணர்வு பதிவு அனைவருக்கும் பகிர்ந்து பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தை தடுப்போம்~