You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பாமக (PMK) தேர்தல் அறிக்கை- கல்வி, உயர்கல்வித்துறையின் அறிவிப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?

பாமக (PMK) தேர்தல் அறிக்கை- கல்வி, உயர்கல்வித்துறையின் அறிவிப்பு  குறித்து உங்கள் கருத்து என்ன?

தேர்தல் நெருங்கவிட்டாலே அரசியில் கட்சிகள் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நலத்திட்டங்கள் குறித்தான தேர்தல் அறிக்கை வெளியிடும். அந்த வகையில், பட்டாளி மக்கள் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது, இதில் பள்ளி கல்வி, உயர்கல்வி அறிவிப்பு குறித்து உங்கள் பார்வைக்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து உங்களின் பயனுள்ள கருத்துகள் அல்லது பரிந்துரைகள், செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னவென்று கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் நாகரீகமான முறையில் தெரிவிக்கவும். அந்த கருத்துகள் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கட்டும்.

(* நிபந்தனைக்கு உட்பட்டவை, இறுதி முடிவு குழுவால் தணிக்கை செய்யப்பட்டு, கருத்துகள் வெளியிடப்படும்)

  • 1. மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்.
  • 2. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பையும், கல்வித் தரத்தையும் வலுப்படுத்துவதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளுக்கு மாறும் சூழலை உருவாக்க வேண்டும் என்பது தான் அரசின் இலக்கு ஆகும்.
  • 3. தமிழ்நாட்டில் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு கல்வி வழங்குவதற்கான அரசின் செலவு இப்போதுள்ள ரூ.32 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்படும். பள்ளிக் கல்விக்கான ஆண்டு ஒதுக்கீட்டை ரூ.80,000 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 4. இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.500 வீதமும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதமும் நிதியுதவி அளிக்கப்படும்.
  • 5. 2021 - 2022ஆம் ஆண்டு முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
  • 6. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் தேர்வுமுறை.
  • 7. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசின் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். 
  • 8. மாணவர்களின் ஆங்கில மொழித் திறனையும், ஆங்கிலத்தில் பேசும் திறனையும் வலுப்படுத்த சிறப்புப் பயிற்சி.
  • 9. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள 9ஆம் வகுப்பில் இருந்து சிறப்புப் பயிற்சி.
  • 10. அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்.
உயர்கல்வி:

  • உயர்கல்வி கற்பதற்கான பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை. கடன் தொகையை தமிழக அரசே வங்கிகளுக்குச் செலுத்தும்.
  • 12. வருமான வரம்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு உயர்கல்வி இலவசமாக வழங்கப்படும்.
  • 13. அரசுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் 1000 பேரும், மாணவிகளில் 1000 பேரும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உயர்கல்வி பயில அனுப்பப்படுவார்கள். செலவை அரசே ஏற்கும்.
  • 14. வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக் கழகங்கள், தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்களுடன் உயர்கல்வி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும். அதன் மூலம் உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களில் கற்பிக்கப்படும் உயர்கல்வி தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் கிடைக்கும்.
  • 15. சென்னைப் பல்கலைக் கழகமும், அண்ணா பல்கலைக் கழகமும் திறன்சார் அறிவு மையங்களாகத்  (Centre of Excellence) தரம் உயர்த்தப்படும்.
  • 16. தமிழகத்தில் 6 ஒருமைப் பல்கலைக்கழகங்கள் (Unitary Universities) அமைக்கப்படும். ஆராய்ச்சிகளைச் செய்வது மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக இருக்கும்.
  • 17. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி,க்கு இணையான ஓர் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamil nadu Institute of Technology - TIT) அமைக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு சட்டக்கல்லூரியும், ஒரு வேளாண் கல்லூரியும் அமைக்கப்படும். 
  • 18. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குத் தரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடித்து நல்ல தீர்ப்புப் பெறத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். 
  • 19. மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுவது போன்று, அண்ணா பல்கலைக் கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்படும்.
  • 20. நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த பா.ம.க. போராடும்.
  • 21. தமிழகத்தில் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்தியப் பல்கலைக் கழகம், தேசியச் சட்டப் பள்ளி உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் 50% இடங்களை மாநில ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும்.