PM appreciate Paramakudi teacher | பரமக்குடி ஆசிரியருக்கு பிரதமர் பாராட்டு
PM appreciate Paramakudi teacher
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியருக்கு பிரதமர் மோடி பாராட்டு கடிதம் அனுப்பி நெகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.
பரமக்குடி நயினார்கோவில் ஒன்றியத்தில் காராடர்ந்தகுடி அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியர் குடியரசன். இவர் கடந்த ஆகஸ்டு 15ம் தேதி பரிக் பே சர்ச்சா இயக்ககத்தில் மாணவர்களின் தனித்திறன் வளர்ச்சி குறித்து கருத்துகளை மை கவர்மெண்ட் இணையதளம் வழியாக தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து சுதந்திர தினத்தின் அமிர்த காலத்தில் அடுத்து வரும் 25 ஆண்டு காலத்தில், ஒவ்வொருவரின் கருத்துகளை கையில் எடுப்போம் என்ற அடிப்படையில் இந்த இணையதளம் செயல்பட்டது. இதில் அந்த ஆசிரியர் 12 கருத்துகளை அனுப்பி வைத்திருந்தார்.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி கையெழுத்திட்ட கடிதம் அனுப்பி பாராட்டுகளை தெரிவித்தார்.
ஆசிரியர் குடியரசன் கூறும்போது, மாணவர்களின் எதிர்காலம் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு வீடும், பள்ளியும் ஒன்றுதான் என்ற மனநிலை கொண்டிருக்க வேண்டும். தேர்வு என்பது நமது திறமையை வெளிப்படுத்தும் இடமாகத்தான் கொள்ள வேண்டும். பிறர் முன்னிலையில், நம்மை மதிப்படுவது அல்ல. வெற்றியோ, தோல்வியோ இரண்டுமே மாறி, மாறி வருவதுதான் வாழ்க்கை, என்ற எண்ணத்தை கொள்ள வேண்டும் என 12 கருத்துகளை தொிவித்திருந்தேன். இதற்கு பிரதமரிடம் கடிதம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இது உற்சாகம் அளிக்கிறது என்றும் அவர், தெரிவித்துள்ளார்.