You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Plus Two Supplementary Exam Result 2022 | dge.tn.gov.in| பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவு

TN Plus Two Supplementary Exam Result 2023

Plus Two Supplementary Exam Result 2022 | dge.tn.gov.in| பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவு

Plus Two Supplementary Exam Result 2022

அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெற்ற ஜூலை, ஆகஸ்டு 2022, பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவினை, மதிப்பெண் பட்டியலாக (statement of marks) 22.8.2022 திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இணையதளத்தில் காணலாம்.

தேர்வர்கள் தங்களது தேர்வு எண் (Roll No) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read also: TN 10th 12th supplementary exam Timetable PDF 2022

பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவு எப்படி பார்க்க வேண்டும்

தேர்வர்கள் வரும் 22ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் தமது மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன் Result தோன்றும். அதில் “HSE Second Year Supplementary Exam, July/August 2022 - Result   - Statement of Marks Download” என்ற வாசகத்தினை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது தேர்வு மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, தங்களது மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் விண்ணப்பிக்கும் முறை

ஜூலை / ஆகஸ்டு 2022, மேல்நிலை துணைத்தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு தோ்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு 24.8.2022 (புதன்கிழமை) மற்றும் 25.8.2022 (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விடைத்தாள் நகல் கட்டணம்

ஒவ்வொரு பாடத்திற்கும் – ரூ-275

மறுகூட்டல்

  • உயிரியல் பாடத்திற்கு மட்டும் –- ரூ 306
  • ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) – ரூ-205
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.