You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

பிளஸ்2 துணைத்தேர்வு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

governemnt schools closed in tamil nadu

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு - பிளஸ் 2 பொது தேர்வில் (மேல்நிலை இரண்டாம் ஆண்டு)  தோல்வி அடைந்த, வருகை புரியாத மாணவர்கள், பிளஸ் 1 தேர்வர்கள் மற்றும் விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பிளஸ்2 துணைத் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று மே 14ம் தேதி (புதன்கிழமை) முதல் மே 29ம் தேதி (வியாழக்கிழமை) வரை (ஞாயிறு நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

பிளஸ்2 துணைத் தேர்வு தனித்தேர்வர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் 

பிளஸ் 2 துணைத்தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தேர்வர்களும் மற்றும் மார்ச் 2025 பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் சென்று மே 14ம் தேதி (புதன்கிழமை) முதல் மே 29ம் தேதி (வியாழக்கிழமை) வரை (ஞாயிறு நீங்கலாக) காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 

பிளஸ்2 துணைத்தேர்வு தட்கல் விண்ணப்பிக்கும் முறை 

மே 14 முதல் மே 29 வரையிலான நாட்களில் ஜூன்/ஜூலை 2025 பிளஸ் 2 துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) உரிய கட்டணத்தொகை மே 30 மற்றும் ேம 31 ஆகிய நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும். 

சிறப்பு அனுமதி கட்டணம் ரூ 1000 (2024-2025ஆம் கல்வியாண்டு அரசு மற்றும் முழுமையாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறாத/வருகை புரியாத மாணவர்களுக்கு மட்டும் இக்கட்டணத்திலிருந்து விலக்க அளிக்கப்படுகிறது)

அரசு தேர்வுகள் சேவை மையம்

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் மற்றும் பிளஸ்2 துணைத்தேர்வு அட்டவணை 2025 ஆகியவற்றை தேர்வுத்துறை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். மேலும் விவரங்கள் அறிய முதன்மை கல்வி அலுவலகத்தை அணுகலாம், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.