Plus Two Student Ends Life | பிளஸ் 2 மாணவி தற்கொலை
Plus Two Student Ends Life
பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மன உளைச்சலில் இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read Also:
பள்ளி மாணவர்களே தற்கொலை எண்ணம் வேண்டாம் - உடனடி உதவிக்கு அழையுங்கள்
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள தவுட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கீர்த்திகா. இவர் கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்த நிலையில் அண்மையில் அரசு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். இந்த தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்து போலீசார், மாணவியின் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.