Plus Two Key Answer Leaked | பிளஸ்2 விடைக்குறிப்பு கசிவு கல்வித்துறை விசாரணை
Plus Two Key Answer Leaked
பிளஸ்2 விடை குறிப்பு கசிவு எதிரொலியாக பள்ளி கல்வித்துறைக்கு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பிளஸ்2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் விடைக்குறிப்பு சமூக வலைதளங்களில் கசிந்து, பரவி வருவதால் கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடைக்குறிப்பு கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் வரும் 10ஆம் தேதி முதல் 79 மையங்களில் பிளஸ்2 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்ட பிளஸ் 2 விடைக்குறிப்புகள் சமூக வலைதளங்களில் வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், விடை குறிப்பு கசிந்தது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.