Play Schools norms in Tamil |மழலையர் பள்ளி விதிகள் என்ன?
Play Schools norms in Tamil
கூட்டு குடும்பமாக இருந்தபோது, தாத்தா, பாட்டி பேரக்குழந்தைகளை கவனித்து கொள்வது வழக்கம். தனிக்குடுத்தம் என்ற கான்செப்ட்டில் பலர் இன்று சிக்கி தவிக்கின்றனர். குறிப்பாக குடும்பத்தில் இருவர் கணவன், மனைவி என இருவர் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம், அப்போது குடும்ப பொருளாதாரம் கவனிக்கப்படும்.
அதேசமயத்தில் சில பெற்றோர் குழந்தைகளை சமாளிப்பது கடினம் என நினைத்துக்கொண்டு, எப்படா மூனு வயசாகும், போய் ஸ்கூல்ல சேர்த்திடலான்னு ஒரு எண்ணம். பெரும்பாலான பெற்றோரின் மன நிலை என்னவாக இருக்கிறது என்றால், குழந்தையை பள்ளிக்கு சேர்த்துவிட்டால் போதும், நமது கடமை அவ்வளவுதான் என நினைக்கிறோம்.
அங்குதான் ஏராளமான பிரச்னைகள் உருவாகின்றன. பள்ளி எப்படி உள்ளது, அரசு விதிகளுடன் செயல்படுகிறது, குழந்தைகளுக்கா பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என எதைப்பற்றியும் நாம் கவலைப்படவதில்லை. ஆனால், உங்களுக்கு தெரியுமா எவ்வளவு மழலையர் பள்ளிகள் அங்கீகாரத்துடன் செயல்படுகிறது என்று.
சமீபத்தில் பள்ளி கல்வித்துறை நடத்திய கணக்கெடுப்பில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காளான் போன்று பெருகிகிடக்கும் பல மழலையர் பள்ளிகள் பள்ளி கல்வித்துறையிடம் துவக்க அனுமதி பெறாமல் பள்ளி நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், நாம் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று அறியாமல் எளிய வகை, நடுத்தர பெற்றோர் இது போன்ற பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை அனுமதித்தது மிகப்பெரிய கொடுமை. இதனால் பல பின்விளைவுகள் சந்திக்க வேண்டியதாக இருக்கும். எனவே, பெற்றோர்களாகிய நீங்கள் விளையாட்டு பள்ளி விதிகள் அறிந்து இருக்க வேண்டும். ஒவ்வொன்றாக, இந்த தொகுப்பில் நாம் காணலாம்.
மழலையர் பள்ளி விதிகள் அறிமுக தொகுப்பு
நர்சரி, பிரைமரி, ப்ளே ஸ்கூல் என அனைத்து வகையான விளையாட்டு பள்ளிகளுக்கு இந்த விதி பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகள் 2015ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளிகள் மாநிலத்தில் உள்ள பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கீழ் உள்ள தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும்.
இந்த பள்ளிகளுக்கு மேல்முறையீட்டு அதிகாரியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் செயல்படுவார்கள்.
முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அடுத்த நிலையில் தொடக்க கல்வி இயக்குனர் இந்த பள்ளிகளை மாநில அளவில் கண்காணிக்க அதிகாரம் படைத்தவர்.
இந்த பள்ளிகளில் பாடம் சம்மந்தம் இல்லாமல், குழந்தைகள் உளவியல் ஏற்ப, அவர்களை பள்ளிகளில் வழிநடத்துவார்கள்.
விளையாட்டு பள்ளி தொடர்பான சுற்றறிக்கைகள் அனைத்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கிடைக்கும்.
பள்ளிகள் குறைபாடுகளுடன் செயல்பட்டால் பள்ளி செயல்படுவது நிலைப்பாட்டின் அரசின் முடிவே இறுதியானது.
அடுத்த தொகுப்பு விரைவில் காணலாம்...