Physics and Mathematics Course at Government Colleges | கணிதம் இயற்பியல் பாடப்பிரிவுகள் அரசு கல்லூரிகள் நீக்க உத்தரவு
Physics and Mathematics Course at Government Colleges
தமிழகத்தில் 12 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிம் போதிய வரவேற்பு இல்லாததால் கணிதம், இயற்பியல் படிப்புகளை நீக்கவும், அதற்கு பதிலாக புதிய பட்டப்படிப்புகளை சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 31ம் தேதி நடைபெற்ற உயர்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கையின்போது, ஒரு சில அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வரவேற்பு இல்லாத, மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ள படிப்புகளை மட்டும் நீக்கம் செய்துவிட்டு, அந்த படிப்புகளுக்கு பதிலாக தேவையின் அடிப்படையிலான படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள புதிய படிப்புகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டார்.
Read Also: வேளாண்மை பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியல்
இந்த நிலையில், சேந்தமங்கலம், நாகலாபுரம், லால்குடி, வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனூர், மொடக்குறிச்சி, திட்டமலை, கூடலூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் 12 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் படிப்புகளை நீக்கவும், அதற்கு பதிலாக கணினி அறிவியல், தமிழ், உயர் தொழில்நுட்பவியல், வணிக நிர்வாகவியல், தாவரவியல், பொருளியல், விலங்கியல் ஆகிய படிப்புகளை புதிதாக தொடங்கவும் பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற நடவடிக்கை எடுக்குமாறு அந்த கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.