PGTRB Age Limit | டிஆா்பி வயது வரம்பு நீட்டிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர்
PGTRB Age Limit
கோவையில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு, தனியார் பள்ளிகள் தாளாளர், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது, தனியார் பள்ளி நிர்வாகத்தினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அவர்கள் கொரோனா காலத்தில் பள்ளிகள் நடத்துவதில் சிரமம் இருப்பதாக தெரிவித்தனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு அரசு சார்பில் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆசிரியர்கள், பெற்றோர், கல்வித்துறை அதிகாரிகள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைவரின் எதிர்பார்ப்பு சரி செய்ய வேண்டும் என முயற்சி செய்து வருகிறோம்.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையான பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். நவம்பர் முதல் கேரளாவில் பள்ளிகள் திறக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தேர்வில் தேர்வர்களுக்கான வயது நீட்டிப்பு தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுசம்மந்தமாக, முதல்வர்கள் அவர்கள் கவனத்திற்கு கொண்டு தீர்வு காணப்படும். தனியார் பள்ளியில் தொடர்ந்து செயல்பட வேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தி உள்ளனர். அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பள்ளிகளுக்கு மாணவர்களை வரச்சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. கொரோனா பாதிப்பு இருந்தால் பள்ளிகள் உடனடியாக கல்வி அலுவலகத்திற்கு தொியப்படுத்த வேண்டும். இது ஒரு குற்றமல்ல. மறைக்க தேவையில்லை. நீட் தேர்வு தொடர்பாக சட்ட போராட்டம் நடத்தப்படும். பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்கள் தேவை உள்ளது. அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.