You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

முதுநிலை நீட் தேர்வு ஜூலை 7ம் தேதி நடக்கிறது

NEET scam in tamil

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 7ம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தனித்தனியாக தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்த பின்னர், இளநிலை நீட் தேர்வு நடத்தப்படும். முதுநிலை நீட் தேர்வின் வாயிலாக எம்.டி., எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகளில் இணைந்து கொள்ள முடியும். 

அந்த வகையில் மார்ச் 3ம் தேதி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்ந நீட் தேர்வு ஜூலை 7ம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.