இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் சே பவித்திரன் வெளியிட்ட அறிக்கை: சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் மொத்தம் 27 துறைகள் உள்ளன. இதில் ஏழை பட்டியலின மாணவ மாணவிகள் பலர் ஆராய்ச்சி பயின்று வருகின்றனர். கலை மற்றும் அறிவியல் துறையில் ஆராய்ச்சி பயிலும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கும் முன் பன்னாட்டு ஆய்வேடுகளான ஸ்கோபஸ் மற்றும் வெப்ஆப் சயின்ஸ் இவற்றில் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டால் மட்டுமே முனைவர் பட்ட ஆய்வேடுகளை சமர்ப்பிக்க முடியும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
Rea Also: சத்தியமங்கலம் அரசு கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்இவற்றில் ஆய்வுக் கட்டுரையை வெளியிட சுமார் 40 முதல் 45 ஆயிரம் வரை செலவிட வேண்டி உள்ளது. இது பல்கலைக் கழக மானியக்குழுவின் விதிகளுக்கு முரணானது. பல்கலைக் கழக மானியக் குழுவின் விதியில் கேர்லிஸ்ட்டில் உள்ள நூலில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தால் போதும் என்று உள்ளது. இதை தான் மற்ற பல்கலைக் கழகங்கள் பின்பற்றுகின்றன. ஆனால் சேலம் பெரியார் பல்கலைக் கழக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவு ஒருங்கிணைப்பாளர் மட்டும் தேவையற்ற விதியினை பின்பற்றி வருகிறார். இதனால் நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வினை முடிக்க முடியாமல் படிப்பை நிறுத்தி உள்ளனர். மேலும் புதியதாக முனைவர் பட்டத்திற்கு சேரும் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்து ஒற்றை இலக்கத்திற்கு சென்று உள்ளது வேதனை அளிக்கிறது. பல்கலை என்றால் ஆராய்ச்சி தான் முதலிடம் பெறும். ஆனால் ஆராய்ச்சியோடு விளையாடும் போக்கு தான் பெரியார் பல்கலையில் காணப்படுகிறது. எனவே தமிழக அரசின் உயர் கல்வித் துறை இந்த பிரச்சனையில் தலையீடு செய்து மாணவர்களின் எதிர்கால ஆராய்ச்சி கல்வியை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.