பெரியார் குறித்த குறிப்புகள் கர்நாடக மாநில பாட புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பாடப்புத்தகத்தில் பெரியார் குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டு, ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கோவார் குறித்த குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி பாடபுத்தகங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு வரலாறு புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பெரியார் சீர்திருத்த வரலாறு குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன. ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திப்பு சுல்தானின் வரலாறு குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கோவார் குறித்த குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளது மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடகக் கல்வித் துறை அமைச்சர் பி நாகேஷ் நிபுணர்களின் பரிந்துரையின் பேரிலேயே பாடத் திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்துள்ளார் குறை கூறுபவர்கள் குறித்து கவலை கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |