புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த திராவிடச்செல்வம், பின்னர் புதுக்கோட்டை பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தற்போது அவர் பட்டுகோட்டை மாவட்ட கல்வி அலுவலராக (தொடக்க கல்வி) பணியாற்றி வந்தார். இவர் மீது புலானய்வு அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விசாரணை அடிப்படையில், அந்த அமைப்பு பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 27ம் தேதி, பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி திராவிடச்செல்வத்தை சஸ்பெண்ட் செய்து உத்தவிட்டார். அதன் நகலை மின்னஞ்சலில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.