Pasumai PalliKooda Thittam | பசுமை பள்ளி கூட திட்டம் அமைச்சர் அறிவிப்பு
Pasumai PalliKooda Thittam
தமிழகத்தில் 50 பள்ளிகளில் 10 கோடி மதிப்பீட்டில் பசுமை பள்ளிக்கூட திட்டம் செயல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்நாதன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவைகள் சுற்றுச்சூழல் துறையின் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மெய்யநாதன் காலநிலை மாற்றம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், முதல்வரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 25 பள்ளிகளில் பசுமை பள்ளிக்கூட திட்டம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது என்றார்.
Read Also: தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது
2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மேலும் 50 பள்ளிகளில் 10 கோடி மதிப்பீட்டில் பசுமை பள்ளிக்கூட திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். மேலும் கால நிலை மாற்றம் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் பசுமை தமிழ்நாடு திட்டத்திற்கு ஆயிரம் குறுங்காடுகள் தொழிற்சாலைகளால் உருவாக்கப்படும் என அறிவித்தார். தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ் என்று தெரியும் வகையில், 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடுகள் உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார்.