இந்த பதிவில் நாம் தமிழ்நாடு மாநில குழுந்தைகளுக்கான கொள்கையில் அதன் பங்கேற்பு என்னவென்று பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசின் கொள்கையின் பொருத்தப்பாடு, தாக்கம், கூடுதல் மதிப்பு மற்றும் நடைமுறையில் பொருந்தும் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துகையில், குழந்தைகள் தங்கள் கருத்துக்களை உருவாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கிறது. குழந்தைகளை மதிப்பதும் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பங்கேற்க அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதும் அரசு மேற்கொள்ளும் விரிவான சில நடவடிக்கைகள் ஆகும்.
தேவையான பிற நடவடிக்கைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
1. குழந்தைகளின் வயது, முதிர்ச்சி மற்றும் திறன்களுக்கு ஏற்ப அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் இலட்சியத்தை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், அவர்களின் உரிமைகள் பற்றி அவர்கள் அறிந்து கொண்டனர் என்பதை உறுதிப்படுத்தல்.
2. குழந்தைகள் தங்களின் கருத்துக்களையும் தேவைகளையும் வெளிப்படுத்துவதற்கான தளங்களை பலப்படுத்துதல் மற்றும் அவற்றிற்கிடையே இணைப்பை ஊக்குவித்தல்.
3. குழந்தைகள் தங்கள் தொடர்பான விடயங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
4. குழந்தையின், குறிப்பாக பெண் குழந்தையின் கருத்துக்களுக்கு மிகுந்த மதிப்பளிப்பதை ஊக்குவித்தல்.
5. குடும்பம், பள்ளிகள் மற்றும் சமூகத்தில் குழந்தைகள் எந்த அளவுக்கு பங்கேற்கிறார்கள் என்பதை அளவிடுவதற்கான அளவுகோல்களை நிறுவ வேண்டிய அவசியத்தை அரசு உணர்கிறது. மேலும் ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் சுயேச்சையான மதிப்பீடுகளுடன் இவை அமைய வேண்டும் என்பதை ஆதரிக்கிறது.
6. "குழந்தைகள் கலந்துரையாடவும் ஆலோசனைகள் பெறவும் சமூக ஆதரவுக் குழுவை’ உருவாக்குவதன் மூலம் சமூக அமைப்புகள், சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் / அரசு சாரா நிறுவனங்கள், அமைப்புகளின் கூட்டமைப்புகள், பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட்கள்) மற்றும் கல்வி நிறுவனங்களுடன் வலிமையான கூட்டணியை உருவாக்குதல்.
7. பல துறை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, உள்ளாட்சி அமைப்புகள், சமூகம் சார்ந்த அமைப்புகள், துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புக்கள் ஆகியவற்றைப் பலப்படுத்துதல்
8. மிகவும் பின்தங்கிய குழந்தைகளைக் கண்டறிதல், புதிய, நிரூபிக்கப்பட்ட செலவு குறைந்த செயல்பாடுகளில் ஈடுபடுதல், தடைகளைச் சமாளித்தல், சர்வதேச, தேசிய அமைப்புகளுடனும் மற்றும் சமூகங்களுடனும் இணைந்து செயல்படுவதன் மூலம் வலிமையான சமபங்கு அணுகுமுறைக்கான தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கையின் அடிப்படையில் குழந்தைகளுக்கான வலிமையான நிலையான மாதிரி வடிவமைப்பை உருவாக்குதல்.
9. 12 முதல் 18 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் பாலர் சபைகளை உருவாக்குதல்.
10. பாலர் சபைகள் வருடத்திற்கு நான்கு முறையாவது பாலர் கிராம சபையாகக் கூடி, குழந்தைகள் தொடர்பான விடயங்களில் தீர்மானங்களை நிறைவேற்றி, கிராம சபையில் சமர்ப்பித்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்தல்.