Part Time Teachers Retirement Age | பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60 வரை உயர்வு
Part Time Teachers Retirement Age
மாநில திட்ட இயக்குனர் சுதன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
முதலாவதாக அனைத்து வகையான தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் சுமார் 16 ஆயிரம் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் 60 வயது தொடர்ந்து பணி புரிய அனுமதிக்கப்படுகிறது.
Read Also: ITK Salary Issue | மதிப்பூதியம் வழங்காமல் இழுத்தடிப்பு தன்னார்வலர்கள் தவிப்பு
இதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர பயிற்றுநர்கள்
(consolidated staff/special educators/ part time instructors) உள்ளடக்கிய கல்வி மையங்களில் பணிபுரியும் பாதுகாவலர் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 2022 முதல் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60 ஆக உயர்த்தி வழங்கி ஆணையிடப்படுகிறது.
அனைத்து மாவட்ட முதன்ைம கல்வி அலுவலர்களும் இதுசம்மந்தமாக வட்டார வள மையங்களுக்கும் மற்றும் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.