அதிமுக அரசு ஆட்சி முடியும் காலகட்டத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்களது கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போாரட்டம், தொடர் உண்ணாவிரதம், காத்திருப்பு உள்ளிட்ட பல போராட்டங்கள் நடந்தது. குறிப்பாக, பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டதாக தெரிகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியில், தமிழக அரசு அவர்களது மாத சம்பளத்தை ரூ.7,700 லிருந்து, ரூ.10 ஆயிரமாக உயர்த்தியது. இருந்தாலும் பணி நிரந்தரம் கோரிக்கை வலுவலாக முன்வைத்த போதிலும், அரசு தரப்பில் அவர்களது கோரிக்கை ஏற்றகொள்ளவில்லை, போராட்டமும் முற்று பெற்றது. இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ‘No Work No Pay’ என்ற அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஈரோடு மாவட்ம் பகுதிநேர பயிற்றுநர்களது மாத ஊதியமானது ரூ.7,700 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் வீதம் மாதத்திற்கு 12 அரை நாட்களுக்கு (மே மாதம் நீங்கலாக 11 மாதத்திற்கு மட்டும்) வழங்கப்பட்டுள்ளது. எனவே, பிப்ரவரி 2021ம் மாதத்தில் இருந்து 4.2.2021 முதல் 12.02.2021 வரை உள்ள தேதிகளில் பள்ளிக்கு வராத நாட்களை போராட்ட காலமாக கருதி ‘No Work No Pay’ என்ற அடிப்படையில் ஊதியத்தினை பிடித்தம் செய்து மாவட்ட திட்ட அலுவலக வங்கி கணக்கில் செலுத்திட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.