Part Time Teachers Latest News | பகுதி நேர ஆசிரியர் சான்றிதழ் சாிபார்ப்பு
Part Time Teachers Latest News
தினந்தந்தி செய்தி அடிப்படையாக கொண்டு, பகுதி நேர ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மேற்பார்வையாளர்கள் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
தினந்தந்தி ஊடக செய்தியின்படி, 2012-2013 கல்வி ஆண்டில் பகுதி நேர ஆசிரியர்கள் (உடற்கல்வி, ஓவியம், தையல், இசை) பணியமர்த்தப்பட்டனர் என்றும், தினத்தந்தி ஊடகச் செய்தியின்படி பல ஆசிரியர்கள் உரிய பயிற்சி முடிக்காமலும், தகுதியான சான்றிதழ் இல்லாமலும், போலி சான்றிதழ் சமர்பித்து, பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பகுதி நேரமாக நியமிக்கப்பட்ட மேற்கான் ஆசிரியர்களது கல்வி சான்றிதழ்கள் மற்றும் நியமன ஆணை ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக கோவை வருவாய் மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் குழு ஒன்றினை அமைத்து சான்றிதழ்களை ஆய்வு செய்து அதன் அறிக்கையினை 2 பிரதிகளில் இவ்வலுவலகத்தில் 6.7.2023க்குள் தனிநபர் மூலம் ஒப்படைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை நேற்று அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.