Part time teacher salary hike delay | பகுதி நேர ஆசிரியா்களுக்கு ஊதிய உயர்வு இழுத்தடிப்பு
Part time teacher salary hike delay
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கல்வி அமைச்சரால் அறிவித்த அரசாணை வெளியிடாமல் இழுத்தடிப்பு-மாநில திட்ட இயக்குனருக்கு கலை ஆசிரியர் சங்கம் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 2012 மார்ச் மாதம் 16549 பேர் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 6190 பேர் ராஜினாமா செய்து விட்டனர் எனவும் தற்போது 10359 பேர் மட்டுமே பகுதி நேர ஆசிரியராக பணி செய்வதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் புள்ளி விவரம் வெளியிட்டு 10000 ஊதியம் தற்போது பெற்று வரும் இவர்களுக்கு 2500 ரூபாய் ஊதிய உயர்வு தருவதாகவும், அதனுடன் சேர்ந்து பத்து லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு தருவதாகவும் அரசு தீர்மானம் செய்துள்ளதாக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கடந்த அக்டோபர் 4 ம் தேதி கல்வி அமைச்சர் வெளியிட்டார்.
பணி நிரந்தரம் கேட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு கிடைத்ததே என நினைத்த நிலையில் கல்வி அமைச்சர் அறிவிப்பு வெற்று அறிவிப்பாகி விட்டது என ஏமாற்றம் அடைந்தனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரால் ஊதிய உயர்வு செயல்முறைகள் வெளியிட வேண்டும்.
மாநில திட்ட இயக்குனர் பகுதி நேர ஆசிரியர்களுக்காக கல்வி அமைச்சர் அறிவித்த ஊதிய உயர்வு கண்டு கொள்ளவில்லை என கலை ஆசிரியர் நலச்சங்கம் குற்றம் சாட்டுகிறது.
கல்வி அமைச்சர் ஊதிய உயர்வு அறிவித்து 50 நாட்கள் கடந்து விட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசாணை வெளியிட வேண்டும் என கலல ஆசிரியர்கள் நலச்சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறி உள்ளார்.