திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அரசு பள்ளி மாணவனை தலைமை ஆசிரியை தாக்கியதை கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டாவூர் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவரை தலைமை ஆசிரியை தாக்கியதாக கூறப்படுகிறது. மாணவர் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள் தலைமை ஆசிரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பெற்றோர் கூறும்போது, தலைைம ஆசிரியை தனது மகனை சுவற்றில் தள்ளி தாக்கியதாகவும், இதில் மாணவனின் கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், தலைமை ஆசிரியை தான் தாக்கவில்லை எனவும் கூறியுள்ளார். இச்சம்பவத்தால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.