தனியார் பள்ளிகள் இயங்குமா? இயங்காதா? உச்சகட்ட குழப்பத்தில் பெற்றோர்கள்
தனியார் பள்ளிகள் இயங்குமா?
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் போராட்டகாரர்கள் அந்த பள்ளியை இன்று சூறையாடினர். மேலும் பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்துகொளுத்தப்பட்டது. மேலும், போலீஸ்காரர் மற்றும் போராட்டகாரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, காலையில் கலவரமானது. குறிப்பாக, மாணவிக்கு ஆதரவாக நீதி கிடைக்க வேண்டும் என்றும் பல தரப்பினர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வரும் நிலையில், பள்ளி சூறையாடியதற்கும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், தனியார் பள்ளிகள் சங்கங்கள் கூட்டமைப்பு (விளையாட்டு பள்ளிகள் முதல் சிபிஎஸ் பள்ளி சங்கங்கள்) அவசர ஆலோசனை செய்துள்ள நிலையில், பள்ளியில் வன்முறை நிகழ்த்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாளை (18.7.2022) திங்களன்று பள்ளிகள் செயல்படாது என்று அறிவித்துள்ளனர்.
Read Also This: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் பள்ளி சூறையாடல், காவலர் மீது தாக்குதல்
அதேசமயம், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம், மாணவர்கள் கல்வி பாதிக்கப்படாத வகையில், பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும், உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் பள்ளிகளை எச்சரித்துள்ளது. அதே சமயம் சில பள்ளி தாளாளர்கள், பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று பெற்றோர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். சில மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகளை அறிவுறுத்தி உள்ளனர். சில பள்ளி நிர்வாகிகள், பள்ளிகள் செயல்படும் பட்சத்தில் அசம்பாவிதம் ஏதாவது நிகழக்கூடும் என்ற அச்சத்தில் விடுமுறை அளித்துள்ளதாகவும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சில பள்ளி நிர்வாகிகள், பள்ளிக்கு விடுமுறை அளிக்கலாமா அல்லது வேண்டாமா என்ற இரட்டை குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், உறுதியான தகவல் தெரியாமல், நாளை தனியார் பள்ளிகள் செயல்படுமா அல்லது செயல்படாதா என்று உச்சகட்ட குழப்பத்தில் லட்சகணக்கான பெற்றோர்கள் உள்ளனர்.