You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

அரசு பேருந்து PANIC BUTTON பெண்கள் மிஷ் பண்ணாதீங்க...

PANIC BUTTON AT GOVT BUSES

அரசு பேருந்து PANIC BUTTON பயன்பாடு மகளிருக்கு எவ்வாறு உதவும் என்பது இந்த பதிவின் தொகுப்பு

மாநகர போக்குவரத்து கழகம் சென்னை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், முதல் கட்டமாக 500 பேருந்துகளில் சிசிடிவி எனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிர்பயா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த திட்டத்தை சென்னையில் தொடங்கிவைத்தார். ஒவ்வொரு பேருந்திலும் மூன்று கேமராக்கள், நான்கு அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன.

PANIC BUTTON விளக்கம்

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மற்றவர்களால் ஏற்படும் அசௌகரியங்களின் போதும், பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய நிகழ்வுகளின் போதும், அவசர அழைப்பு பொத்தானை PANIC BUTTON ஐ அழுத்தி அந்நிகழ்வுகளை பதிவு செய்யலாம்.

இவ்வாறு செய்வதன்மூலம், கட்டளை சமயத்தில், பேருந்து நடந்த சம்பவத்தின் வீடியோ பதிவின் சில வினாடி முன் தொகுப்புடன் ஒரு எச்சரிக்கை மணி ஒலிக்கும். இநு்து ஓலி தூண்டுதலை கொண்டு செயலியை இயக்குபவர், நிலைமையை கண்காணித்து நிகழ்நேர அடிப்படையில் அடுத்த நடவடிக்கை ஆவண செய்வார்.

பேருந்தின் நடத்தினர், பேருந்துனுள் இந்த ஒலி ஏற்படும்போது, அங்குள்ள நிலைமையைக் கண்காணித்து அதற்கு தக்கவாறு காவல்துறை நடவடிக்கை மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் 9445030570 (நிர்பயா உதவிமையம்) என்ற கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரினை தெரிவிக்க வேண்டும். புகார் தெரிவிக்கப்பட்டவுடன் தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் தகுந்த நடடிவக்கை எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் PANIC BUTTON பயன்பாடு.

ORDER - DOWNLOAD HERE PDF