Pallikalvi Seithi: ஆசிரியர்களுக்கான அனைத்து பயிற்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்துள்ளார். இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Pallikalvi Seithi:
அதன்படி அவர், இன்று வெளியிட்ட செயல்முறையில் கூறியிருப்பதாவது,
பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகளின்படி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கற்றல் அடைவுகள் சார்ந்த வலுவூட்டல் பயிற்சி ஜனவரி 10ஆம் தேதி முதல் வட்டார தலைமையிடத்தில் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி இணைய வழியாக வழங்கப்படவுள்ளது.
எனவே பிப்ரவரி 3ம் தேதி முதல் நடைபெற உள்ள கற்றல் அடைவுகள் சார்ந்த வலுவூட்டல் பயிற்சியினை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பயிற்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
இதனால், ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.