கோவை மாவட்டம், பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் வருவாய் மாவட்டம் செயற்குழு கூட்டம் கடந்த நவம்பர் 22ம் தேதி கோவையில் நடந்தது.
இதில், இளநிலை உதவியாளர்களுக்கு, உதவியாளர் பதவி உயர்வு உரிய காலத்திலும், பத்து வருடங்களுக்கு மேல் வழங்கப்படாமல் உள்ளது, எனவே உரிய நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இளநிலை உதவியாளர் பதவியிலிருந்து மீண்டும் ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்ட ஆய்வக உதவியாளர்களுக்கு தேர்வு நிலை ஆணைகள் பெறும் பொருட்டு உரிய ஆணைகள் வழங்கப்படாமல் இருப்பது, உரிய ஆணைகள் வழங்க வேண்டும்.இந்த இரண்டு அம்ச கோரிக்கை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் உறுப்பினர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை பணியாற்ற உள்ளனர். மேலும், டிசம்பா் 13ம் தேதி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.