You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
P Vellalapalayam SP Nagar ITK Center Amazing | இல்லம் தேடி கல்வியில் புதுமை - அசத்தும் தன்னார்வலர் தம்பதியினர் மாரிமுத்து மனிஷா
இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல் ஆக்கிட மிக தீவிரமாக களம் இறங்கியுள்ள கோபிசெட்டிபாளையம் இளைஞர் ஒருவர். அவரது பெயர் மாரிமுத்து, தன் வீட்டருகே உள்ள ஒரு இடத்தை குழந்தைகளை ஈர்க்கும் விதமாக, தன் சொந்த செலவில் அந்த இடத்தை வண்ணமயமாக மாற்றியுள்ளார்.
P Vellalapalayam SP Nagar ITK Center
கொரோனா பாதிப்பு காரணமாக தொடக்க நிலை மாணவர்கள் கற்றல் இடைவெளி ஏற்பட்ட நிலையில், தமிழக அரசு கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிமுகம் செய்தது.
தன்னார்வலர்கள் என்று அழைக்கப்படும் இல்லம் தேடி கல்வி ஆசிாியர்கள் கற்றல் இடைவௌியை போக்கும் வகையில் பல கற்றல் செயல்பாடுகளுடன் கற்பித்தல் பணியை அந்தந்து குடியிருப்பு பகுதியில் மேற்கொண்டு வருகின்றனர். இதிலும், முற்றிலும் வித்தியாசமாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் உள்ள பா வெள்ளாளபாளையம் எஸ்பி குடியிருப்பு பகுதியில் உள்ள தன்னார்வலர் மாரிமுத்து மற்றும் அவரது மனைவி மனிஷா ஆகியோர் பல்வேறு கற்றல் செயல்பாடுகளால் முன்மாதிரியாக செயல்படுகிறார்கள். இவர்களது செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
READ ALSO THIS |இல்லம் தேடி கல்வி திட்டம் என்றால் என்ன?
மாரிமுத்து மற்றும் மனைவி மனிஷா - P Vellalapalayam SP Nagar ITK Center
மாரிமுத்து நம்மிடம் கூறும்போது, இல்லம் தேடி கல்வி திட்டம் முன்பே, சுடர் அமைப்பு மூலம் வீதி வகுப்பறையில் பங்கேற்று கொரோனா காலங்களில் கற்பித்தல் பணி செய்து வந்தேன். பின்னர் இல்லம் தேடி கல்வி தொடங்கியபோது, மாணவர்கள் அடிப்படை கல்வியை உறுதி செய்யும் வகையில், நானும், எனது மனைவி மனிஷா இல்லம் தேடி தன்னார்வலர்களாக பதிவு செய்தோம். ஏனென்றால், பா வெள்ளாளபாளையம் கிராமத்தில் உள்ள எஸ்.பி நகர் குடியிருப்பு பகுதியில் தன்னார்வலராக யாரும் பணியாற்ற முன்வரவில்லை. தற்போது, நான் கோபி வட்டாரத்திற்கு சிஎஸ்ஓ (Civil Society Organization) ஆக மாவட்ட ஆட்சியர் மூலம் நியமிக்கப்பட்டார். மனிஷா இல்லம் தேடி தன்னார்வலராக தேர்வு செய்யப்பட்டார்.
இல்லம் தேடி கல்வி மையம் பொது இடத்தில் செயல்பட என்ற நோக்கத்தில், அங்குள்ள நூலகம் அருகே அரசுக்கு சொந்தமான காலியிடம் தேர்வு செய்தேன். ஆனால், அந்த இடம் அசுத்தம் உள்ளிட்ட காரணங்களால் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இந்த இடத்தை அழகுப்படுத்தி இல்லம் தேடி கல்வி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.
அதன்படி அந்த இடத்தை சுத்தம் செய்து, மாணவர்கள் அமரும் வகையில் தளம் சரி சீரமைத்து வர்ணம் பூசப்பட்டது. பின்னர், பொலிவிழந்த சுவர்களில் வர்ணம் பூசப்பட்டது. குறிப்பாக, மாணவர்கள் கவரும் வகையிலும், சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் பழங்குடி மக்களின் ஓவிக்கலை தொடர்பாக வார்லி ஓவியத்தை சுவர்களில் வரையப்பட்டது. அப்போது ரூ.13 ஆயிரம் சொந்த செலவில் அந்த இடம் புதுப்பொலிவு பெற்றது. இதன் நோக்கம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே. இதன் திறப்பு விழாவில், முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், கல்வி அதிகாரிகள், அகரம் பவுன்டேசன் கார்த்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
P Vellalapalayam SP Nagar ITK Center - கல்வி செயல்பாடுகள்
இல்லம் தேடி தன்னார்வலர் மனிஷா கூறும்போது, இந்த மாலை நேர வகுப்பில் 18 குழந்தைகள் அடிப்படை கல்வி பயின்று வருகின்றனர். வழக்கமாக கல்வியுடன், அவர்களது வெளிப்புற திறனை மேம்படுத்தும் நோக்கில் நாட்டுபுற கலைகள், பொம்மலாட்டம் மூலம் கல்விகள் கற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது, கல்வியுடன் மாணவர்கள் கலையும் கற்க வேண்டும் என்பதே. அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் சமத்துவ பொங்கல் இந்த மையத்தில் கொண்டாடப்பட்டது. இல்லம் தேடி கல்வி மையத்தை பள்ளி அல்லது வீடுகளில் இல்லாமல், அனைவருக்கும் பொது என்ற நோக்கில் இங்கு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களும் மகிழ்ச்சியுடன் கல்வி பயின்று வருகின்றனர், என்றார்.
தனியார் பள்ளிகளை போலவே, இங்குள்ள குழந்தைகள் டிஜிட்டல் முறையில் கல்வி கற்கும் நோக்கத்தோடு, இரண்டு வாரத்திற்கு ஓரு முறை மாலை வேளையில் புரஜெக்டர் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறத. இதுதவிர காகித கலை கற்பித்தல், ஓவியங்கள் கற்பித்தல் மற்றும் சுற்றுச்சூழலில் மரக்கன்று நடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளையும் செய்து வருகிறோம். அதே வேளையில், பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு திரையின் மூலம் காண்பிக்கப்பட்டது.
யார் இந்த இல்லம் தேடி தன்னார்வலர் மாரிமுத்து?
மாரிமுத்து என்பவர் ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் சுடர் அமைப்பில் பங்கு வகிப்பவர். சுடர் அமைப்பின் மூலம் செயல்படுத்தப்படும் வீதி வகுப்பறையில் பங்கு வகிக்கிறார். தற்போது செயல்படுத்தப்படும் இல்லம் தேடி கல்வியில் கோபி வட்டார சிஎஸ்ஓவாகவும் செயல்படுகிறார் மற்றும் 505 இல்லம் தேடி கல்வி மையங்களை கண்காணித்து வருகிறார்.