Operation Smile Scheme in Tamil Nadu |ஆபரேஷன் ஸ்மைல் திட்டம் 11,244 குழந்தைகள் மீட்பு
Operation Smile Scheme in Tamil Nadu
குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்,
ஆபரேஷன் ஸ்மைல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் இந்த மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆபரேஷன் ஸ்மைல் திட்டம் மூலம் ரயில் நிலையங்களில் சுற்றி திாியும் குழந்தைகள் மீட்கப்பட்டு, பெற்றோர்கள் மற்றும் காப்பகங்களில் ரயில்வே போலீசார் மூலம் ஒப்படைக்கப்பட்டனா்.
மேலும், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடத்தப்படும் ஆபரேஷன் ஸ்மைல் நிறைவு நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது.
ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தலைமை வகித்தார், ஐஜி வனிதா மற்றும் டிஐஜி ஜெயகவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் பத்திரமாக மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசாருக்கு ரயில்வே டிஜிபி பாராட்டு தெரிவித்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஆபரேஷன் ஸ்மைல் திட்டம் மூலம் கடந்த 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 1,080 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு மட்டும் வீட்டை விட்டு வெளியேறிவர்கள் மற்றும் வழிதவறி வந்தவர்கள் என மொத்தம் 2,371 பேர் மீட்கப்பட்டு, அதில் 66 குழந்தைகள் அவர்களிடம் பெற்றோர்களிடமும், 2,305 குழந்தைகள் காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, 2017ம் ஆண்டு 2,068 குழந்தைகளும், 2018ம் ஆண்டு 2,475 குழந்தைகளும், 2019ம் ஆண்டு 2,392 குழந்தைகளும், 2021 ஜனவரி தற்போது வரை 1,106 குழந்தைகள் என 11,244 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 76 சதவீதம் பேர் காப்பகத்திலும், 24 சதவீதமும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், தமிழ்நாடு ரயில்வே காவல்துறையில் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. திருச்சி மற்றும் சென்னை ரயில் நிலையத்தில் மட்டுமே 30 சதவீத பெண் போலீசார் பணியாற்றுகின்றனர், இவர் அவ்வாறு கூறினார்.