இந்தியாவுக்கு உட்பட்ட காஷ்மீா் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய நடந்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து சிறப்பு இரண்டு தொகுப்புகளாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் எனப்படும் என்சிஆர்டி புத்தகம் வெளியிட்டுள்ளது. 3ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்ளுக்கான 2 தொகுப்புகளில் பயங்கரவாதம் மற்றும் இந்தியாவின் எதிா்தாக்குதல், ஆபரேசன் சிந்தூர் உள்ளிட்ட குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் எனப்படும் என்சிஆர்டி, 3 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆபரேசன் சிந்தூர் குறித்து 2 தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. 3 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு Operation Sindoor -– A Saga of Valour (வீரத்தின் ஒரு காவியம்) என்ற தலைப்பிலும், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு Operation Sindoor – A Mission of Honour and Bravery என தலைப்பிலும் வெளியிட்டுள்ளது.ஆபரேசன் சிந்தூர் விளக்கம்
காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற சுற்றுலாதளத்தில் பயணிகள் பயங்கரவாதிகளால் நடத்திய திடீர் தாக்குதல் குறித்தும், அதனை இந்திய எதிர்கொண்ட முறையை குறித்தும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே நடைபெறும் உரையாடலாக இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பஹால்காம் தாக்குதல் எப்போது
2025ஆம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நோபாலை சேர்ந்த ஒருவருடன் 26 சுற்றுலா பயணிகள் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் குறிக்கோள் பரப்புவது, நமது நாட்டின் அமைதியை குலைப்பதே ஆகும் என அதன் தொகுப்பில் குறிப்பிட்டுள்ளது.இந்திய இதுபோன்ற பயங்கரவாதத்தை பார்த்து அமைதியா இருக்காது. நாட்டின் அமைதியை உறுதி செய்யும் வகையில் ஆபரேசன் சிந்தூர் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபரேசன் சிந்தூர் பெயர் காரணம்
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அமைதியை பாதுகாப்பதற்கும், இழந்த உயிர்களை கவுரவிப்பதாகவும் பிரதிபலிக்கிறது. உயிாிழந்தவர்கள் மனைவிகளின் வலியை உணர்ந்து, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சிந்தூர் பெயரிடப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை
பஹல்காம் தாக்குதல் மட்டுமின்றி, பயங்கரவாதிகளும் இந்தியாவிற்கு இடையேயான நடவடிக்கைகள், குறிப்பாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து இடம்பெறுகிறது. ஆர்ட்டிக்கல் 370 பற்றி, ’370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் அமைதியைக் காண பாகிஸ்தான் தயாராக இல்லை, என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் சரியாக 9 இடங்களில் மே 7ம் தேதி ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் ராணுவம் நடத்திய தாக்குதல் பற்றி விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்களுக்கு ஆபத்து இல்லாமல், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இந்தியா எப்படி திட்டமிட்டது. தாக்குதலுக்கான இடங்களை தேர்வு செய்தல், அதனை சரியான முறையில் நிறைவேற்றியது உள்ளிட்டவற்றை பற்றி எடுத்துரைக்கும் வகையில் உரையாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா ராணுவ தொழில்நுட்பம்
இந்திய ராணுவ தாக்குதலில் பயன்படுத்திய ராணுவ ஆயுதங்கள் மற்றும் விமானங்கள் பெயர்கள், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ராணுவ தொழில்நுட்பம் பற்றியும் இடம்பெற்றுள்ளது. MiG-29K, fighters jet, rafale, mirage 2000, Su-30MKI, drones -Hawk, Scout, Eagle and S-400 and AKASH ஏவுகனை தாக்குதல் பற்றியும் இடம்பெற்றுள்ளது. இஸ்ரோவின் செயற்கைகோல் கண்காணிப்பிற்கு உதவியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரைப்பட வடிவில் விளக்கம்
ஆபரேசன் சிந்தூர் தாக்குதில் மொத்தம் 9 இடங்களில் நடத்திய தாக்குதல் பட்டியல் வரைப்படம், தாக்குதலில் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன் புகைப்படங்கள், ராணுவ விமானப்படை மற்றும் கடற்படையின் பலத்தை விளக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது. 3 முதல் 8ஆம் வகுப்பு தொகுப்பை பதிவிறக்கம் செய்ய – கிளிக் செய்யவும் 9 முதல் 12ஆம் வகுப்பு தொகுப்பை பதிவிறக்கம் செய்ய – கிளிக் செய்யவும் ஒற்றுமை, பலம் மற்றும் வீரம்
பயங்காரவாத்தை தவிர்த்து, அமைதியை நிலைநாட்டவும், இந்தியாவின் ராணுவத்தின் வீரத்தையும், இந்திய மக்களின் ஒற்றுமையும் பிரதிப்பலிக்கும் வகையில் தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் காரணத்தையும், அதனின் வெற்றியை இந்தியாவின் இராணுவ பலத்தையும் இத்தொகுப்பின் மூலம அறிந்து கொள்ள முடியும்.