Ooty Teachers suspended |ஊட்டி ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
Ooty Teachers suspended
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி, கடந்த 3ம் தேதி வரை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை மாணவ, மாணவிகள் எழுத 41 மையங்கள் ஏற்பட்டு இருந்தது. மேலும், தேர்வு பணியில் 44 முதன்மை கண்காணிப்பாளர்கள், 43 துறை அலுவலர்கள், 86 அலுவலக பணியாளர்கள், 574 அறை கண்காணிப்பாளர்கள், 14 வினாத்தாள் வழித்தட அலுவலர்கள் என 761 ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
Read Also: பிளஸ்2 விடைக்குறிப்பு கசிவு கல்வித்துறை விசாரணை
மேலும், காப்பி அடிப்படை தடுக்க 69 பேர் அடங்கிய பறக்கும்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 27ம் தேதி நடந்த பிளஸ் 2 கணித தேர்வில் சில மாணவ, மாணவிகளுக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவி செய்ததாக புகார் எழுந்தது. குதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் தேர்வில் விடை எழுத, மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றி ராதாகிருஷ்ணன் வழித்தட அலுவலராக பணியாற்றிய சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேரை நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.