Online Rummy Portion Removed | சீட்டுகட்டு பகுதி கணித பாடத்தில் நீக்கம்
Online Rummy Portion Removed
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் சீட்டு கட்டு கணக்கு பகுதி நீக்கப்பட்டிருக்கிறது. சீட்டுக்கட்டு தொடர்பான விளையாட்டு பாட புத்தகத்தில் இடம் பெறுவதற்கு எதிர்ப்பு எழுந்ததால் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு ஏற்கனவே ஆன்லைன் ரம்மியை தடை செய்திருக்கிறது. இது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டு அதற்கு ஆளுநரும் அனுமதி வழங்கி இருக்கிறார். பள்ளி பாட புத்தகத்தில் இந்த ஆன்லைன் ரம்மி தொடர்பான சில பாடப் பகுதியில் சில வகுப்புகளில் ஏற்கனவே இடம் பெற்றிருந்தது. ஆறாம் வகுப்பு பாடத்தில் ஆன்லைன் ரம்மி பாடப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டு அந்த பாடப்பகுதியை ஏற்கனவே நீக்கம் செய்யப்பட்டது. தற்போது பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் எட்டாவது அந்த பாட தலைப்பில் பிளேயிங் கார்ட் என்ற ஒரு பிரிவில் சீட்டுக்கட்டு கணக்குகள் என்ற ஒரு பிரிவு இடம் பெற்றிருக்கிறது.
Read Also: முன்கூட்டியே வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை
இந்த பகுதியானது கடந்த கல்வி ஆண்டில் இருந்த நிலையில் வரக்கூடிய கல்வி ஆண்டில் அதாவது அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய புதிய பாட புத்தகத்தில் இவை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலாக வேறு புதிய பகுதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த சீட்டுக்கட்டு கணக்குகள் பகுதியில் 5 கேள்விகள் ஏற்கனவே இடம் பெற்றிருக்கின்றன. அந்த ஐந்து கேள்விகளும் முழுமையாக நீக்கம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக இரண்டு கேள்விகள் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த புதிய பாடப் பகுதியைத்தான் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கக்கூடிய புதிய பாட புத்தகங்கள் மூலமாக இந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.