Omalur Teacher Suspension | மாணவரை தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்
Omalur Teacher Suspension
சேலம் மாவட்டத்தில் மாணவனை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஒமலூர் அருகே புளியம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அன்புமணி என்பவர் ஆறாம் வகுப்பு மாணவரை சரமாரியமாக அடித்துள்ளார். காயமடைந்த மாணவனை, அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து மாணவரை அடித்த ஆசிரியர் மீது பெற்றோர் ஒமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து ஆசிரியர் அன்புமணி மீது மாணவரை தாக்கியது, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) விசாரணைக்கு உத்தரவிட்டு நிலையில், ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.