Old pension scheme latest news in Tamil | பழைய ஓய்வூதிய திட்டம் முதல்வர் மவுனம் கலைக்க வேண்டும்
Old pension scheme latest news in Tamil
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, முதல்வர் தன் நெடிய மவுனம் கலைக்க வேண்டும் என, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத்தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் வெளியிட்ட அறிக்கை: நிதி அமைச்சர் தியாகராஜன், ஓய்வூதியம் தொடர்பான கொள்கை விளக்க குறிப்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த எந்தவொரு வழிமுறையையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
Read Also: ஜாக்டோ ஜியோவினர் அலறவிட்ட அதிமுக எம்எல்ஏ
அவர் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் வாழ்வாதார உரிமையான அகவிலைப்படி, சரண் விடுப்பு ஆகியவற்றை பரித்ததோடு, அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் சமூகத்தை எள்ளி நகையாடுகிறார். ஜாக்டோ – ஜியோ கடந்த, 11ம் தேதி கோட்டை முற்றுகை அறிவித்த நிலையில், அமைச்சர் குழு பேச்சு நடத்தியது. அதை தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடரில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், முதல்வர், ஒற்றை வார்த்தையை கூட சொல்லாமல், ெதாடர்ந்து மவுனம் காத்து வருவது, தமிழக அரசின் மீதான கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை முற்றாக தகா்த்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும், தன் நெடிய மவுனத்தை கலைத்து, முதல்வர் உடனே அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.