வாரிய தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, அந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதிம், அரசு பள்ளி தேர்ச்சி விகிதம், 100 விழுக்காடு பெற் பள்ளி விவரம் உள்ளிட்டவை தகவல்களாக வழங்கப்படும். அடுத்த நாள் இதனை செய்தியாக வெளியிடப்படும்.
ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தில், எப்போது பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானாலும், பத்திரிகையாளர்களுக்கு, பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம் அடங்கிய பட்டியலை முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் வழங்குவது வழக்கம். ஆனால், இம்முறை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான போது, அந்த விபரங்கள் வழங்கப்படவில்லை.
இதற்கு, கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 16வது இடத்தில் இருந்த தஞ்சாவூர், இந்தாண்டு 26வது இடத்திற்கு சென்றது தான் காரணம். மேலும், அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை வெறும் எட்டு பள்ளிகள் மட்டுமே எடுத்திருந்தன.
பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், பொறுப்பு அமைச்சராக உள்ள மாவட்டத்தில், தேர்ச்சி சதவீதம் இப்படி சரிந்ததால் தான் எந்த தகவலையும் அதிகாரிகள் வழங்கவில்லை என, கூறப்பட்டது.
நிருபர்கள் சிலர், 'கல்வியாண்டு துவக்கத்தில் இருந்தே மாணவர்கள் மீது கவனம் செலுத்தி இருந்தால், இப்ப ஓடி, ஒளிய வேண்டியதில்லையே...' என, முணுமுணுத்தவாறு அங்கிருந்து சென்றனர்.