பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், தற்போது பொதுதேர்வு வேண்டாம் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த வரிசையில் பிரபல காமெடி நடிகர் விவேக் பொது தேர்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது," *பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மனஇறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே".* இதற்கிடையில், 10ம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ளார்.